பணத்திற்கு ஆசைப்படாத பெண்!! - குவியும் பாராட்டு..!!

    -MMH

     பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்பார்கள் அது ஒரு புறமிருக்க அதை முறியடிக்கும் வகையில் கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே சங்கமம் நகரில் வசிக்கும் பெண் ஸ்டெல்லா. 

இரு தினங்களுக்கு முன்பு அவர் தனது வீட்டுக்கு மளிகை பொருள் வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். அப்போது சாலை அருகே இரண்டு 500 ரூபாய் கட்டுகள் கிடந்ததை பார்த்து அதிர்ந்து போனார்.

அக்கம்பக்கம் யாரும் இல்லை என்று தெரிந்ததும் பணத்தை எடுத்த ஸ்டெல்லா நேராக செட்டிபாளையம் காவல் நிலையம் சென்று  ஒப்படைத்தார். பிறகு அந்தப் பணம் போத்தனூர் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவருடைய பணம் என்றும் தெரியவந்தது.

இடம் வாங்குவதற்காக வரும்பொழுது பணத்தை தவற விட்டார் என்றும் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளார் என்றும் தெரியவந்தது. அந்த பணத்தை விசாரணைக்கு பிறகு எஸ்.ஐ அருள்பிரகாஷ் அவர்கள் இஸ்மாயில் இடம் பணத்தை ஒப்படைத்தார்.

பணத்தைப் பெற்ற இஸ்மாயில் அவர்கள் பணத்தை எடுத்து தானே வைத்துக் கொள்ளாமல் உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஸ்டெல்லா என்ற பெண்ணை மனதார பாராட்டி காவலர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

-ஈஷா,கோவை.

Comments