கதிர் அறுவடையின் போது பிடிபட்ட மலைப்பாம்பு..!
கதிர் அறுவடையின் போது பிடிபட்ட மலைப்பாம்பு. பொன்னமராவதி அருகே கல்லம்பட்டி ஊராட்சி. மேல கல்லம்பட்டியில் ஆறுமுகம் என்ற விவசாயி கதிர் அறுவடை செய்யும் போது பிடிபட்ட மலைப்பாம்பு. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், கல்லம்பட்டி ஊராட்சி, மேலக்கல்லம்பட்டியில் விவசாயி ஆறுமுகத்தின் என்பவரின் நிலத்தில் இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் கதிர் அறுவடை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது கதிரின் அடியில் சரசரவென சத்தம் கேட்டது. கதிர் அறுவடை செய்து கொண்ட இளைஞர்கள் சந்தேகத்தின் பெயரில் கதிரை நீக்கி பார்க்கும் பொழுது உள்ளே 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 8 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பைப் பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் உயிருடன் விட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-M.சதாம் உசனே், பொன்னமராவதி.
Comments