புத்தாண்டை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா!!
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சியில் 2021 புத்தாண்டை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி திருநாவுக்கரசு கலந்துகொண்டு ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளான தெப்பகுளம், அங்கன்வாடி சின்னப்பிச்சன் கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் பொது இடங்களில் புளி, வேம்பு, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டார்.
அதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி திருநாவுக்கரசு கூறும்போது எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிகளுக்கு தனித்தனியாக மரக்கன்றுகள் வளர்ப்பதற்கு நர்சரி கார்டன் அமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். இந்த மரக்கன்றுகள் ஊராட்சியில் பொது இடங்களில் நட்டு வளர்ப்பதற்கும், வெளி சந்தைகளில் விற்பனைக்கும் பயன்படுத்தப்பட்டு ஊராட்சிக்கு நிதி வருவாய் ஆதாரம் செய்யப்படும் எனவும் கூறினார். இந்த விழாவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சித்ரா சுப்பையா, ஊராட்சி செயலர் வெள்ளைச்சாமி மற்றும் பணித்தள பொறுப்பாளர் துரைராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
- M.சதாம் உசேன்.
Comments