அரசின் கட்டுப்பாடுகளை கண்டுகொள்ளாத திரையரங்குகள்..!! கோவையில் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

 

-MMH

கோவை மாவட்டம் திரை அரங்குகளில் அரங்கேறிய சம்பவம். தமிழக அரசு மற்றும் சுகாதார துறை கடந்த 6 ஆம் தேதிக்கு பிறகு கொரோனோ நோய் தொற்று அதிகம்  பரவுவதால் ஒரு சில விதிமுறைகளை வகுத்தது இதில் ஒன்று திரை அரங்குகளில் வரும் பார்வையாளர்கள் சாமூக இடைவெளி விட்டு உட்கார வேண்டும் அதை சரியாக பின் பற்ற வேண்டும் என ஆணை பிறப்பித்து உத்தரவு இடபட்டது.

ஆனால் இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் மக்கள் மேல் அக்கறை இல்லாமல் கோவையில் ஒரு சில திரை அரங்குகளில் நடக்கும் சம்பவங்கள்  பார்க்கையில் வராதவருக்கும் நோய் தொற்று வந்து விடுமோ என்ற கேள்வி எழுகிறது.  காரணம் சினிமா பார்க்க நுழைவு சீட்டு அதாவது அதிக விலை கொடுத்து வாங்கபடும் சினிமா டிக்கெட், நபர்களை சமூக இடை வெளிவிட்டு பத்திரமாக உட்கார வைக்கிறார்கள்,குறைந்த விலையில் டிக்கெட் எடுக்கும் நபர்களுக்கு எப்போதும் போல ஒன்றாக உட்கார வைக்கிறார்கள். 

அரசு நாளுக்கு நாள் நிறைய விதிமுறைகள் கட்டு பாடுகள் விதித்து கொரோனவுடன் போராடி வரும் நிலையில்.லாபத்தை மட்டும் பார்த்து மக்களை இப்படி நோய்தொற்றுக்கு வழிவகை செய்யும் இந்த   வியாபாரிகளின் மீது நடவடிக்கை எடுக்குமா சுகாதார துறை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ராஜேஷ் கோவை.

Comments