சேமிப்புகளுக்கான வட்டியை குறைத்தது தொடர்பான அறிவிப்பு வாபஸ்! ஏற்கனவே இருந்த வட்டி விகிதமே தொடரும்! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்!
சேமிப்புகளுக்கான வட்டியைக் குறைத்தது தொடர்பான அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் அளித்துள்ளார். ஏற்கனவே இருந்த வட்டி விகிதம் தொடரும் எனவும் அறிவித்துள்ளார்.
சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4%ல் இருந்து 3.5%ஆக குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி சேமிப்பு, வைப்புத் தொகை திட்டங்கள், PPF, KVB, பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்களுக்கு நேற்று வட்டியை குறைத்து அறிவித்த நிலையில் இன்று வாபஸ் பெறப்படுகிறது.
-Ln.இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.
Comments