தேர்தல் முடிவுகள் வெளியாகத் தாமதமாகும்! - சத்யபிரதா சாஹு!

  -MMH

கொரோனா தொற்று காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுமென தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

நேற்று தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 3,30,380 தபால் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், இந்தாண்டில் அதிகபட்சமாக நேற்று வரை 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.

அரசு ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகளைத் தவிர மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்குகள் செலுத்தியதால், தபால் வாக்குகள் அதிகரித்துள்ளது.

இன்று நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின்போது, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும். முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். எனவே, கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும்" என்று தெரிவித்தார்.

- பாரூக்.

Comments