கோவையில் பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலையிட்டு மரியாதை !!

 

-MMH 

      கோவையில் பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது. கோவை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், கோவை வடக்கு சடமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் ஆகியோர் தலைமையில் கோவை அவினாசி சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது.மேலும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சிதலைவி அம்மா திருவுருவ சிலைகளுக்கும் மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில்,அதிமுக கொடியேற்றி வைத்து அலங்கரித்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.மேலும் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்கள்.இதில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், உட்பட பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செய்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments