டெல்டா மாவட்டங்களில் கடும் மழை!! திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடு!!

    -MMH 

தமிழகத்தில்  கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது.  குறிப்பாக கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள்  கடும் மழை பொழிவை சந்தித்து வருகிறது. பெரும்பாலான வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல்  இருப்பதால் மழை நீர் தேங்கி  பரந்த ஏரி போல காட்சி அளிக்கின்றது. தஞ்சாவூர்  மாவட்டம் அம்மாபேட்டை  ஒன்றியத்திற்குட்பட்ட புளியக்குடி ஊராட்சி பகுதியில் கடும் மழையின் காரணமாக  வாய்க்கால்களில்  அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர்  ஊருக்குள் புகுந்து பெரும்பாலான குடிசைகளை நீரில் மூழ்கடித்து உள்ளது .


வீடுகளைச் மழைநீர்  சூழ்ந்த தகவலை அறிந்த பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரித நடவடிக்கை எடுத்து வடிகாலை சரி செய்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது .  அதன் விவரம் வருமாறு பாபநாசம் எம்எல்ஏ'வின் நடவடிக்கையால் வடிகால் அமைப்பு புளியக்குடி ஊராட்சி வடக்கு தோப்பு புளியக்குடி பகுதியில் சுமார் 50 மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் உருவானது.


இது தொடர்பாக அம்மாப்பேட்டை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் செந்தில்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்களுக்கு கோரிக்கை விடுத்தார். சட்டன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா அவர்கள் பாபநாசம் வருவாய் வட்டாட்சியர் திரு. மதுசூதனன் அவர்களிடம் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டதை அடுத்து அம்மாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை வட்டாட்சியர் உடனடியாக அந்த இடத்தை ஆய்வு செய்து சீரமைக்க உத்தரவிட்டார். 

அம்மாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள்  முன்னிலையில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு வெள்ளநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் தடுக்கப்பட்டது. உடனடியாக தலையிட்டு மழை நீரை வடிய வைப்பதற்கு வைப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தமைக்காக  பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு எம். ஹெச். ஜவாஹிருல்லா, பாபநாசம் வருவாய் வட்டாட்சியர் மதுசூதனன், அம்மாப்பேட்டை  ஊராட்சி ஒன்றிய ஒன்றிய பெருந்தலைவர் வீ. கலைச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் காசி. சில்வர்மணி,ஊராட்சி மன்ற துணை தலைவர் பி. சுசீந்திரன், உள்ளிட்டவர்களுக்கு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபேட்டை ஒன்றியக் குழுவின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாக  ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

-ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments