புரூனேவில் இருந்து கோவைக்கு தனி விமானம் இயக்கம்!!
தென்கிழக்கு ஆசிய நாடான புரூனேவில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் தனி விமானம், நவ. , 15ல் கோவை வந்தடைகிறது. பணி நிமித்தமாகவும், இதர காரணங்களுக்காகவும் புரூனே செல்லும் இந்தியர்கள் பலர், அங்கிருந்து இந்தியா திரும்பி வர நேரடி விமான வசதியின்றி சிரமப்படுகின்றனர்.
அவர்களுக்கென தனி விமானத்தை அமர்த்தி, தாய்நாடு அனுப்பி வைக்கும் பணியில் இந்திய துாதரகம் ஈடுபட்டுள்ளது. சில மாதங்களாக தடைபட்டிருந்த இப்பணி, மீண்டும் துவங்கியுள்ளது. இதன்படி, ராயல் புரூனே ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தனி விமானம் நவ. , 15ல் புரூனேவில் இருந்து கோவைக்கு இயக்கப்படுகிறது!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.
Comments