பெட்ரோல் போட வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்!!

 -MMH 

கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். ஹெல்மெட் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டி வரும் நபர்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இருசக்கர வாகன விபத்தில் உயிரிழப்பவர்கள் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் இருந்தது தெரியவந்து உள்ளது. எனவே ஹெல்மெட் இன்றி இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை போக்குவரத்து போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் ஹெல்மெட் இன்றி பெட்ரோல் போட வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் கூறியதாவது, கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனங்களை இயக்கினாலும், சிலர் ஹெல்மெட் அணிவதை தவிர்த்து வருகின்றனர். 

இதனை கருத்தில் கொண்டு ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் போட வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு  செய்துள்ளதாகவும் இதுகுறித்து மாநகரில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடமும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். என அவர் கூறியுள்ளார்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments