ஆனைமலை வடக்கு ஒன்றிய பகுதிகளில் திமுகவின் ஓராண்டு சாதனைகளை விளக்கி தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள்...!!!

   -MMH 

    ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட  வடக்கு ஒன்றிய பகுதிகளான அம்பராம்பாளையம், காளியப்ப கவுண்டன் புதூர், திவான்சா புதூர், ஆகிய பகுதிகளில் திமுக அரசின் ஓராண்டு கால சாதனையை விளக்கி தெருமுனை பிரச்சார பொதுக் கூட்டங்கள் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திமுக தலைமை கழக சொற்பொழிவாளர் தூத்துக்குடி சரத் பாலா அவர்கள் சாதனைகளை மக்களிடத்தில் பரப்புரை செய்தார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியினை  வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கன்னிமுத்து ஏற்பாடு செய்திருந்தார். அனைத்து பகுதிகளிலும் அந்தந்த பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


நாளைய வரலாறு செய்திக்காக 

-அலாவுதீன் ஆனைமலை.

Comments