அதிக குழந்தைகளுடன் ஆட்டோவில் ஆபத்தான பயணம் : போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்குமா..?

 

-MMH

தூத்துக்குடியில் விதிமுறையை மீறி அதிகமாக மாணவர்களை ஆட்டோவில் ஏற்றி செல்வதாக புகார்கள் எழுந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் தனியார் பள்ளியில் எல் கே ஜி படித்த மாணவன் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தான். இதனை தொடர்ந்து பள்ளி வாகனங்களில் சிறப்பு ஆய்வு நடத்த அதிரடியாக உத்தரவிட்டது. போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ய காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடியில் அரசு விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு ஆட்டோக்களில் அதிக மாணவர்களை ஏற்றி செல்வதாக புகார்கள் எழுந்து வருகிறது. ஆட்டோக்களில் அளவுக்கதிகமான எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. இதனை தடுக்க காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடியில் இருந்து 
-வேல்முருகன்.

Comments