தல – தளபதிக்கு நடிகர் அருண் விஜய் வாழ்த்து!!
கோவை: கார் ரேஸில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கும், அரசியல் களத்தில் செயல்படும் நடிகர் விஜய்க்கும், நடிகர் அருண் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ ரெட்ட தல’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்த படத்தில் அருண் விஜய், சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை பிடிஜி யூனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ளார்.டிசம்பர் 25ஆம் தேதி ‘ரெட்ட தல’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அருண் விஜய், பேஷன் (Passion) விஷயத்தில் நடிகர் அஜித்தை பின்பற்றுவதாகவும், அரசியல் (Political) செயல்பாடுகளில் நடிகர் விஜயை பின்பற்றுவதாகவும் கூறினார். இருவருமே தனக்கு ஊக்கமாக...