உலக கணித தினத்தை முன்னிட்டு கணித புதிர் போட்டி நடைபெற்றது!!

கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி  நடுநிலைப் பள்ளியில் உலக கணித தினத்தை முன்னிட்டு கணித புதிர் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு.

கந்தர்வக்கோட்டை மார்ச் 10

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக கணித தினம், உலக πதினம், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம் உள்ளிட்ட முப்பெரு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை கணித புதிர்கள் குறித்து போட்டி நடத்தினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா உலக கணித தினம் குறித்து பேசும் பொழுது ;-

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சர்வதேச கணித தினம்  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14 அன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது. இது கணிதத்தின் முக்கியத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் அதன் பங்களிப்பை உணர்த்தும் தினமாகும். இது π தினம்

 என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் ராமானுஜரின் பிறந்தநாளான டிசம்பர் 22 தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது.

மனிதகுலத்திற்கு மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிற குவாண்டம் கம்ப்யூட்டிங் என்கின்ற புதுப்படைப்பு கியூபிட்  என்கின்ற கணித வகையை அடிப்டையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை உணரும் போது கணிதம் என்ற பாடத்தின் இன்றியமையாமை மற்றும் மேன்மையை பறைசாற்றுவதாக அமைகிறது.

மேலும் தற்கால முற்போக்கான அறிவியல் கோட்பாடுகளான செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் ஆகியவற்றின் மக்கள் பயன்பாடு அதிகரித்து வருவது கணிதம் என்கின்ற ஒப்பற்ற அறிவுசார் கோட்பாட்டின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டு வருகின்றன என்ற உண்மை நம் அனைவரையும் கணிதத்தின் மீது ஈர்ப்பது தவிர்க்க முடியாதது என்பதை உணர்த்துகின்றது 2026 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் மிகவும் உலகளாவிய இரண்டு மனித உடைமைகளுக்கு இடையிலான தொடர்பை கொண்டாடுகிறது என்ற கரு பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று பேசினார் என்றும், பேசினார்.

கணித புதிர்கள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. நிறைவாக ஆசிரியை சிந்தியா நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments