ஒட்டப்பிடாரம் பொதுக்கூட்டத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!!!
-MMH தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் பொதுக்கூட்டம் முன்னாள் எம்எல்ஏ மோகன் தலைமையில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு பேசுகையில்: இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தியாகம் செய்து இன்ணுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ஒரு இயக்கம் ஒரு கட்சி ஒரே சின்னத்தை 234 தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனியாக மக்களை மட்டும் சந்தித்து ஆட்சி அமைக்கக்கூடிய வரலாற்றை உருவாக்கி 14 ஆண்டு காலம் நல்லாட்சி நடத்தி மக்களின் மனங்களிலே மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற கொள்கையை பிடிப்போடு வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஒட்டப்பிடாரம் தொகுதி என்றைக்கு அசைக்க முடியாத எக்கு கோட்டை. என்றைக்கு தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக ஒட்டப்பிடாரம் மாறும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நிம்மதியாக இல்லை. இந்த ஆட்சி போனால் தான் எங்களுக்கு விடியல் என மக்கள் புலம்பும் நிலையில் உள்ளனர். இந்த ஆட்