தூத்துக்குடி விஎம்எஸ் நகர் பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!

தூத்துக்குடி புறநகர் பகுதியாக இருந்து ஊராட்சி நிர்வாகத்தில் செயல்பட்ட பல பகுதிகள் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பகுதியுடன் இணைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக சில பணிகள் நடைபெற்றாலும் பொதுமக்களின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவு பெறாமல் இருந்த நிலையில் திமுக ஆட்சி வந்த பிறகு பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட விஎம்எஸ் நகர் பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார்சாலை அமைக்கும்  பணி மற்றும்  ஆர்எஸ்பிஆர் பகுதியில் உள்ள குடிதண்ணீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகியவற்றை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர் கூறுகையில் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டு அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை அமைத்து கொடுக்கப்படும் எல்லா பகுதிகளுக்கும் சீரான குடிதண்ணீர் விநியோகம் முறைப்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது. 

தமிழக முதலமைச்சர் தளபதியார் அறிவுரையின் படி பொது மக்கள் நலன் தான் முக்கியம் என்று கருதி பணியாற்றி வருகிறோம் எந்த குறைபாடுகள் இருந்தாலும் நேரடியாக என்னிடமோ அல்லது அதிகாரிகளிடமோ தெரியப்படுத்தலாம். என்று தெரிவித்தார். பின்னர் அப்பொழுது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சீரான குடிநீர் கிடைப்பதற்காக நன்றி கூறினார்கள். உடன் கவுன்சிலர்கள் கீதா முருகேசன், ரெங்கசாமி, வட்ட செயலாளர் ரவீந்திரன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர் உள்ளிட்;ட பலர் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-மாரிதாஸ், தூத்துக்குடி தெற்கு.

Comments