சர்வதேச பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது!!

கோவையில் சர்வதேச பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் ஆர்வமுடன்  கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாணவர்களின் விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ளவும், பள்ளிகளிடையே நட்புறவை ஏற்படுத்தவும்,சர்வதேச மற்றும் சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கு இடையே  ஆண்டுதோறும் வாலிபால், கால்பந்து, த்ரோபால், கோ-கோ, வளையப்பந்து, டேபிள் டென்னிஸ், செஸ், யோகாசனம், கேரம், ஸ்கேட்டிங்,உள்ளிட்ட  தடகள போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக சர்வதேச பள்ளி  மாணவர்களுக்கான கால்பந்து போட்டி காளப்பட்டி பகுதியில் அனன் சர்வதேச பள்ளியில் நடைபெற்றது.

முன்னதாக போட்டிகளை பள்ளியின் தலைவர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

மண்டல அளவில் மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில்,கோவை,திருப்பூர்,நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் பந்தை லாவகமாக அடித்து மாணவர்கள் கோல் அடிப்பதில் ஆர்வம் காட்டினர்.

இது குறித்து அனன் பள்ளியின் முதன்மை முதல்வர் சந்திரசேகரன்,முதல்வர் நந்தகுமார் ஆகியோர் கூறுகையில், மாணவர்களின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக போட்டிகள் நடைபெறுவதாகவும்,மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் முதல் நாள் சர்வதேச பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளும்,இரண்டு மற்றும் மூன்றாவது நாள் சகோதயா கூட்டமைப்பு பள்ளி மாணவர்களும் போட்டிகளில் விளையாட உள்ளதாக  தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments