ஆசிரியர் உரை
நமது நாளைய வரலாறு புலனாய்வு இதழ் ஆனது துவங்கி ஆறு ஆண்டுகள் ஆகின்றது இதுவரை எந்த லாப நோக்கமின்றி மக்களுடைய பிரச்சினைகளை உள்ளதை உள்ளபடியே எந்த அச்சமும் இன்றி ஆளும் கட்சி செய்தி ஆனாலும் சரி எதிர்க்கட்சி செய்தியானாலும் சரி அதிகாரிகளின் சம்மந்தமான செய்திகள் ஆனாலும் சரி.பொது மக்களின் உரிமைக்காக தைரியமாக குரல் கொடுத்து வருகிறோம். கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்ற உயர்ந்த சிந்தனையோடு பயணித்து வருகிறோம்,நமது இதழின் நிருபர்களும் மற்றும் நிர்வாகிகளும் இதேபோன்ற சிந்தனையுடன் தான் செயலாற்றி வருகிறார்கள்.நமது இதழில் வரும் செய்திகள், கட்டுரைகள் புலனாய்வு செய்திகள் அதன் பின்னணியில் உள்ள நபர்களின் சம்பந்தப்பட்ட புகைப்பட ஆதாரத்துடன் உள்ள தகவல்களை அவ்வப்போது சமூக வலை தளங்களில் நாம் இடுவது வழக்கம். நமது இந்தத் துணிச்சலான பதிவுகளை கூகுள் நிறுவனம் கண்காணித்து வந்தது அதன் விளைவாக... இந்தக் கருத்தரங்கில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களை சேர்ந்த பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டார்கள்.கோவை மாவட்டத்தின் சார்பாக நமது நாளைய வரலாறு புலனாய்வு இதழுக்கு மட்டும் அழைப்பு வந்திருந்தது, ஏன் பத்திரிகைகளை அழைக்கவில்லை என்பது நமக்கு தெரியாது ஆனால் கோவை மாவட்டத்தின் சார்பாக நாம் மட்டுமே கலந்து கொண்டோம்.கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்ற சொல்லுக்கு அர்த்தம் அன்றுதான் நமக்கு தெரிந்தது. இதன் விளைவாக நமது நாளைய வரலாறு புலனாய்வு இதழின் செய்திகள் அனைத்தும் இனி google வலைதளங்களில் பொதுமக்கள் நேரடியாக பார்க்கலாம் அன்றாட நிகழ்வுகளை இனி நாளைய வரலாறு பத்திரிக்கையில் பார்க்கலாம். நன்றி நண்பர்களே.
Comments