மோடியின் பாதை..!? எடப்பாடி பயணம்..?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணத்திற்கு பின் மிகப்பெரிய இமேஜ் அரசியல் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். உலகம் முழுக்க அரசியல் தலைவர்கள் தங்களுக்கு என்று இமேஜை உருவாக்கிக் கொள்வதில் கவனமாக இருப்பார்கள். அமெரிக்க அரசியலில் அதிபர் தேர்தலில் நிற்பவர்களின் இமேஜ் என்பது மிக மிக முக்கியமானது. மிக சிறிய விஷயம் கூட அதிபர் தேர்தலில் நிற்பவர்களின் எதிர்காலத்தை மாற்றிவிடும். பல நூறு கோடி செலவு செய்து டொனால்ட் டிரம்ப் தனது இமேஜை தேர்தலுக்கு முன் உருவாக்கி மக்கள் முன் கொண்டு சென்றார். அதில் வெற்றியும் பெற்றார். செவ்வாய்க்கு போன அதே டெஸ்லா கார்.. எலோன் மஸ்க் நிறுவனத்திற்கு சென்ற முதல்வர் பழனிச்சாமி.. அட செமமோடி எப்படி அதேபோல்தான் இந்தியாவில் பிரதமர் மோடியும். 2013ல் மோடி என்று தேடினால் கூகுளில் குஜராத் ரயில் எரிப்பு சம்பவம்தான் முதலில் வரும். தனக்கு அப்படி இருண்ட நெகட்டிவ் இமேஜை கொஞ்சம் கொஞ்சமாக இணையம் மூலமே அவர் மாற்றினார். குஜராத் மாடல் என்பது இந்தியா முழுக்க பரப்பப்பட்டது. அதுவே அவரின் அடையாளம் ஆனது.யார் பங்கு மோடியின் இமேஜை உருவாக்கியதில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. உலகம் முழுக்க அரசியல்வாதிகள் இப்படி செய்வது வழக்கம்தான். மக்கள் மத்தியில் தங்களை சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்று இவர்கள் இப்படி செயல்படுவார்கள்.முதல்வர் பழனிச்சாமி தற்போது அதே இமேஜ் அரசியலில் இறங்கி இருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக அரசியலில் தற்போது அசத்தல் டாப்பிக் என்றால் அது முதல்வரின் வெளிநாட்டு பயணம்தான். முதல்வர் பழனிச்சாமி வெளிநாடு பயணம் செல்லும் முன் அவருக்கு இருந்த இமேஜ் வேறு, இப்போது இருக்கும் இமேஜ் வேறு. மிக கட்சிதமாக திட்டமிடப்பட்டு அவரின் இந்த பயணம் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அமெரிக்காவில் முதல்வர் கோட் போட்டு வலம் வருவது சாதாரண விஷயம் கிடையாது. அவர் மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார். வெளிநாடு சென்று முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தவர் என்ற பிம்பத்தை உருவாக்கி வருகிறார். முக்கியமாக இன்று டெஸ்லா நிறுவனத்திற்கு சென்றது எல்லாம் பக்கா இமேஜ் அரசியல். அட கிராமம் அதே சமயம் தான் ஒரு விவசாயி, மக்களுக்காக இங்கே வந்து இருக்கிறேன் என்பதையும் தொடர்ந்து நிறுவி வருகிறார். தன்னுடைய எல்லா டிவிட்டுகளிலும் யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்று கூறி பன்முகத்தன்மை பேசுகிறார். இளைஞர்களையும், கிராமத்து பெரியவர்களையும் ஒரே நேரத்தில் கவர தன்னால் முடிந்த அத்தனை விஷயங்களை செய்கிறார்.ஆம் அவரின் இந்த செயல்பாடுகள் வெற்றிபெற்று வருகிறது என்றுதான் கூற வேண்டும். சிலர் அவரின் கோட் சூட் இமேஜை பாராட்டி வருகிறார்கள். சிலர் மீம் போட்டு கிண்டல் செய்கிறார்கள். ஆனால் எப்படியோ அவர் மக்கள் மத்தியில் தன்னை பற்றிய பேச்சு இருக்கும்படி கவனித்துக் கொள்கிறார். சாதனைஎடப்பாடி பழனிச்சாமி முதல்வராக ஆன போது அதிக பட்சம் 1 மாதம் இவர் இருப்பாரா என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் அனைத்தையும் கடந்து, 1 வருடம் முடித்து , உட்கட்சி பிரச்னையை தீர்த்து, டிடிவி தினகரனின் எதிர்ப்பை சமாளித்து , திமுகவின் இடைத்தேர்தல் ஆயுதத்தை எதிர்கொண்டு தொடர்ந்து ஆட்சி அமைத்து வருகிறார். எப்படி தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சேலம் சாலை திட்டங்களில் தான் பெற்ற கெட்டபெயரை தற்போது வெளிநாட்டு முதலீடுகள் மூலம் துடைக்க தொடங்கி இருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி. அவர் உருவாக்கி உள்ள இந்த எலைட் தோற்றம் கண்டிப்பாக அடுத்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும். தன்னுடைய இமேஜ் இதுதான் என்று அவர் மக்கள் மத்தியில் புதிய தோற்றத்தை பதிய வைக்கும் முயற்சியில் உள்ளார். ஆனால் இது முழுக்க வெற்றிபெறுமா என்று தெரியாது.எப்படி அதிபர் அமெரிக்காவில் அதிபர் உயிரோடு இருக்கும் சமயத்தில் என்ற ஒரு நபர் நியமிக்கப்படுவார். செயலாளர்களில் ஒருவருக்கு அந்த பதவி வழங்கப்படும். அதிபர் துணை அதிபர் இருவரும் ஒரே நேரத்தில் இறந்துவிட்டால், இந்த தான் திடீர் என்று அவசரமாக அதிபராக நியமிக்கப்படுவார். ஆனால் மக்கள் பெரும்பாலும் இந்தயை மதிக்க மாட்டார்கள்.க்கு பெரிய அளவில் ஆதரவு இருக்காது.செம் கட்டுப்பாடு ஆனால் இந்தகளுக்கு பெரிய அளவில் அரசியல் நுட்பங்கள் தெரியும். அப்படி என்ற பெயர் இல்லாமல் ஆட்சிக்கு வந்தவர்தான் முதல்வர் பழனிச்சாமி. ஆனால் அவர் தற்போது வெறும் கிடையாது. தன்னுடைய அரசியல் தந்திரங்கள் மூலம் கட்சி, ஆட்சி இரண்டையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார். இப்போது மக்களை கவரும் திட்டத்தில் இறங்கி உள்ளார்.


                                                                                                                      -MMH


Comments