மணமகனுக்கும்,குடும்பத்தாருக்கும் கொரோனா தொற்று-கோவையில் பரபரப்பு!

               -MMH


டெல்லியிலிருந்து திருமண நிகழ்ச்சிக்காக மணமகன் உட்பட 5 பேர் பொள்ளாச்சி அடுத்த தாளக்கரை கிராமத்திற்கு வந்தனர் அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதித்ததில் மணமகன், அவரது தாய், தந்தை மற்றும் அவரது சகோதரர், சகோதரி என 5 பேருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது இதனால் ஜூன் 1-ம் தேதி நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது அவர்கள் தற்போது கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,-அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகிறது சுகாதாரத்துறை இந்நிலையில் மேலும் மணமகன் குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சிக்காக ''நகைக்கடை ,ஜவுளிக்கடை ,செப்பல் கடை'' என பல கடைகளுக்கு சென்று வந்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது இதனால் பொள்ளாச்சியில் இயல்பு நிலை திரும்பி மக்கள் சர்வசாதாரணமாக வெளியில் வந்து கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் இச்செய்தி மக்கள் மத்தியில் அச்சத்தையும், பயத்தையும்... ஏற்படுத்தியுள்ளது இதனால் சுகாதாரத்துறை- அவர்கள் சென்று வந்த இடங்களை கண்டறிந்து அனைவரையும் பரிசோதித்து பொள்ளாச்சியில் நோய் தொற்று பரவாமல் தடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


-முக கவசம் அணிவோம் உயிரை பாதுகாப்போம் என்ற சிந்தனையோடு பொள்ளாச்சி, M.சுரேஷ்குமார்.


Comments