ஆதித்யா ஆட்டோ பாட்ஸ் நிறுவனத்துக்கு சீல்.-மெக்கானிக்குகள் பீதி..!

             -MMH


கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் உள்ள ஆதித்யா ஆட்டோ ஸ்பேர்ஸ் நிறுவனம் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வியாபாரத்தை கோவையை  சுற்றி எல்லா பகுதியிலும் செய்து வருகிறது,இதன் கிளைகள் RS புரம்,பீளமேடு ,ராமநாதபுரம்,துடியலூர்,சுந்தராபுரம் என குறிப்பிட்ட பகுதிகளில் பலநூறு ஊழியர்களுடன் இயங்குகிறது இதன் தலைமை அலுவலமாக காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் உள்ளது இங்கு பணிபுரியும் இரண்டு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சக பணியாளர்கள்  மத்தியில் அச்சம் ஏற்பட்டதால் சிறிது நேரம் அலுவலகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.



சுமார் 20 நபர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனத்தில் இரண்டு நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சக பணியாளருக்கு கொரோனா கண்டறியும் சோதனை நடந்து வருகிறது அதனால் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை நிர்வாகம் ஆதித்யா நிறுவனத்தை பூட்டி சீல் வைக்கப்பட்டது.


கோவை மாநகரத்தை சுற்றி உள்ள இரண்டு சக்கர வாகன பழுது பார்க்கும் (மெக்கானிக்) வாடிக்கை யாளர்கள் தினந்தோறும் ஆதித்யா ஆட்டோ பாட்ஸ் கடைக்கு இரண்டு முதல் மூன்று முறை வந்து செல்வார்கள் அதனால் இவர்களுக்கும் நோய்த்தொற்று வர வாய்ப்புள்ளதாக அச்சபடுகிறார்கள் என மெக்கானிக்குகள் கூறுகின்றனர் இதனால் கோவையை சுற்றி உள்ள மெக்கானிக்குகள் அனைவரும் பீதியில் உள்ளார்கள்.  


-போத்தனூர் சீனி, ருசி மொய்தீன்.  


Comments