ரேஷன் அரிசி கடத்தியவர் கைது..!கோவையில் போலீசார் அதிரடி..!

     -MMH


பொள்ளாச்சி ஆனைமலை கோட்டூர் வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் பேரில் ஆனைமலை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் கோட்டூர் எஸ் ஐ கவியரசு தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


அப்போது கோட்டூர் பேரூராட்சி அலுவலகம் அருகே கேரளா பதிவு எண் கொண்ட வாகனத்தை சோதனையிட்டனர் அதில் 2 டன் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது இதனையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்தனர் மேலும் வாகனத்தை ஓட்டிவந்த மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பூபதி ராஜாவை கைது செய்தனர் பின்பு உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் வாகனம் மற்றும் டிரைவரை ஒப்படைத்தனர்.


இதனை தொடர்ந்து யார் யாரிடம் அரிசி வாங்கப்பட்டது இந்த கடத்தலுக்கு ஏஜென்டாக செயல்பட்டது என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள் கொரோனா நோய் தொற்று காரணமாக வேலை இழந்து மூன்று வேளை உணவுக்கு கஷ்டப்பட்டு வரும் மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது இதை வாங்கி மற்றவர்களுக்கு விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும் இதை கருத்தில் கொண்டு ஆரம்ப வேரை அறுத்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


-பொள்ளாச்சி M சுரேஷ் குமார்.


Comments