எளிமையாகிறது விவசாய மின் இணைப்பு பெறும் வசதி..!
-MMH
எளிமையாகிறது விவசாய மின் இணைப்பு பெறும் வச.திதமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெறுவது மற்றும் இடம் மாற்றுவதில் ஏராளமான சிரமங்கள் இருப்பதாக விவசாயிகள் தரப்பில் கடும் அதிருப்தி இருந்து வந்தது. தற்போதுள்ள நடைமுறைகளில் திருத்தம் செய்து புதிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு விவசாய அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
விவசாய மின் இணைப்பு பெறுதல்:
விவசாய மின் இணைப்புப் பெறும் விவசாயிக்கு குறைந்தது அரை ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். கிராம அலுவலரால் வழங்கப்படும் கிணறு மற்றும் நிலத்தின் உரிமைச் சான்றுடன் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த சான்றும் தேவையில்லை. கிணற்றில் கூட்டு சொந்தக்காரர்கள் இருந்தால் அவர்களின் ஒப்புதல் கடிதம் அல்லது ஈட்டுறுதி பத்திரம் (இண்டெமினிட்டி பாண்டு) இணைக்க வேண்டும்.ஒரே சர்வே நம்பரில் அல்லது உட்பிரிவு சர்வே நம்பரில் ஒருவருக்கு இரண்டு கிணறுகள் இருந்தால், அவர் பெயரில் ஒவ்வொரு கிணற்றுக்கும் தனித்தனி மின் இணைப்பு அனுமதிக்கப்படும்.
ஒவ்வொரு கிணறுக்கும் அரை ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். ஒரே கிணற்றை விவசாயத்துக்கும், விவசாயம் அல்லாத பிற தேவைக்கும் ஒருவர் பயன்படுத்தினால், அவருக்கு ஒரு விவசாய மின் இணைப்பு தவிர்த்து, மற்றொரு மின் இணைப்பு அதற்குரிய டேரிப்பில் அனுமதிக்கப்படும். விண்ணப்பங்களின் அடிப்படையில், உரிய முறை வரும்போது கடிதம் அனுப்பப்படும். அப்போது பெயர், சர்வே எண்ணில் எந்த மாறுதலும் இல்லை என்று உறுதி செய்வதற்காக, 90 நாள் அறிவிப்பு கடிதம், விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.
உறுதிக்கடிதம் கிடைத்ததும் மூன்று பிரிவுகளில் வரிசைக்கிரமமாக பதிவு செய்யப்படும்.முதல் பிரிவில் மின்தொடர் விஸ்தரிப்பு, மேம்பாடு மற்றும் மின்மாற்றி மாற்றம் எதுவும் தேவைப்படாத மின் இணைப்பு, இரண்டாம் பிரிவில் மின்தொடர் விஸ்தரிப்பு, மேம்பாடு உள்ளடக்கிய மின் இணைப்பு, மூன்றாம் பிரிவில் மின் தொடர் விஸ்தரிப்பு மேம்பாடு மற்றும் மின் மாற்றி மாற்றம், புதிய மின் மாற்றி அமைப்பை உள்ளடக்கிய மின் இணைப்பு என்ற அடிப்படையில் இந்த விண்
எளிமையாகிறது விவசாய மின் இணைப்பு பெரும் வசதி:
தமிழக விவசாயிகளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்கும் வகையில், விவசாய மின் இணைப்புப் பெறும் நடைமுறையை மிகவும் எளிமையாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம். தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெறுவது மற்றும் இடம் மாற்றுவதில் ஏராளமான சிரமங்கள் இருப்பதாக விவசாயிகள் தரப்பில் கடும் அதிருப்தி இருந்து வந்தது. தற்போதுள்ள நடைமுறைகளில் திருத்தம் செய்து புதிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு விவசாய அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
விவசாய மின் இணைப்பு பெறுதல்:
விவசாய மின் இணைப்புப் பெறும் விவசாயிக்கு குறைந்தது அரை ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். கிராம அலுவலரால் வழங்கப்படும் கிணறு மற்றும் நிலத்தின் உரிமைச் சான்றுடன் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த சான்றும் தேவையில்லை. கிணற்றில் கூட்டு சொந்தக்காரர்கள் இருந்தால் அவர்களின் ஒப்புதல் கடிதம் அல்லது ஈட்டுறுதி பத்திரம் (இண்டெமினிட்டி பாண்டு) இணைக்க வேண்டும்.ஒரே சர்வே நம்பரில் அல்லது உட்பிரிவு சர்வே நம்பரில் ஒருவருக்கு இரண்டு கிணறுகள் இருந்தால், அவர் பெயரில் ஒவ்வொரு கிணற்றுக்கும் தனித்தனி மின் இணைப்பு அனுமதிக்கப்படும்.
ஒவ்வொரு கிணறுக்கும் அரை ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். ஒரே கிணற்றை விவசாயத்துக்கும், விவசாயம் அல்லாத பிற தேவைக்கும் ஒருவர் பயன்படுத்தினால், அவருக்கு ஒரு விவசாய மின் இணைப்பு தவிர்த்து, மற்றொரு மின் இணைப்பு அதற்குரிய டேரிப்பில் அனுமதிக்கப்படும். விண்ணப்பங்களின் அடிப்படையில், உரிய முறை வரும்போது கடிதம் அனுப்பப்படும். அப்போது பெயர், சர்வே எண்ணில் எந்த மாறுதலும் இல்லை என்று உறுதி செய்வதற்காக, 90 நாள் அறிவிப்பு கடிதம், விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.
உறுதிக்கடிதம் கிடைத்ததும் மூன்று பிரிவுகளில் வரிசைக்கிரமமாக பதிவு செய்யப்படும்.முதல் பிரிவில் மின்தொடர் விஸ்தரிப்பு, மேம்பாடு மற்றும் மின்மாற்றி மாற்றம் எதுவும் தேவைப்படாத மின் இணைப்பு, இரண்டாம் பிரிவில் மின்தொடர் விஸ்தரிப்பு, மேம்பாடு உள்ளடக்கிய மின் இணைப்பு, மூன்றாம் பிரிவில் மின் தொடர் விஸ்தரிப்பு மேம்பாடு மற்றும் மின் மாற்றி மாற்றம், புதிய மின் மாற்றி அமைப்பை உள்ளடக்கிய மின் இணைப்பு என்ற அடிப்படையில் இந்த விண்ணப்பங்கள் பதிவு செய்து கொள்ளப்படும்.மோட்டார் பம்ப் செட், கெப்பாசிட்டர் பொருத்தி மின் இணைப்புப் பெறத்தயார் என்ற கடிதம் விண்ணப்பதாரரிடம் இருந்து பெற்ற மூன்று நாட்களுக்குள் மின் இணைப்பு தரப்படும்.
மின் இணைப்பை இடமாற்றம் செய்தல்:
மின் இணைப்பை தமிழகத்தின் எந்தப் பகுதிக்கும் மாற்ற அனுமதிக்கப்படும். அதற்குரிய செலவை மனுதாரர் ஏற்கவேண்டும். மின் இணைப்பு கொடுத்த தேதியிலிருந்து ஓராண்டு கழிந்த பின்பே இடம் மாற்றம் அனுமதிக்கப்படும். புதிய இடத்திற்கான விண்ணப்பம், இடம் மாற்றம் செய்யக்கோரும் கடிதத்துடன் இணைக்கப்பட வேண்டும். ஒருவருக்கு மட்டும் சொந்தமான கிணற்றில் அவருடைய பெயரிலுள்ள மின் இணைப்பை வேறு இடத்தில் உள்ள சொந்தமான அல்லது கூட்டாகச் சொந்தமான கிணற்றுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம். அதேபோன்று, கூட்டாக சொந்தமான கிணற்றில் ஒருவர் பெயரிலுள்ள மின் இணைப்பையும் வேறு இடத்திலுள்ள அவருக்கு மட்டும் சொந்தமான அல்லது கூட்டாகச் சொந்தமான கிணற்றுக்கும் மாற்றம் செய்து கொள்ளலாம். மின் இணைப்பு உள்ள இடத்தில், தற்போது கிணறு இல்லை என்றாலும் மின் இணைப்பை இடம் மாற்ற அனுமதிக்கப்படும்.
சேஞ்ச் ஓவர் சுவிட்ச் அனுமதி:
விவசாய மின் இணைப்பில் சேஞ்ச் ஓவர் சுவிட்ச் அமைத்து உபயோகத்துக்கு கொண்டு வருவதற்கு முன், மின்சார அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கு எந்த சான்றும் தேவையில்லை. அனுமதி கோரும் கடிதம் கிடைத்த, 15 நாட்களுக்குள் மின்சார அலுவலர் சேஞ்ச் ஓவர் சுவிட்ச் அமைப்பை பார்வையிட்டு சோதனை செய்து சீல் வைக்க வேண்டும். ஆய்வு அறிக்கை நகல், மனுதாரருக்கு அதே இடத்தில் வழங்க வேண்டும். ஒருவேளை, 15 நாட்களுக்குள் அனுமதி கிடைக்காவிட்டால், விவசாய அவசர நிமித்தம் காரணமாக சேஞ்ச் ஓவர் சுவிட்சை அனுமதிக்கப்பட்ட விவசாய தேவைக்கு ஏற்ப அவ்வப்போது இயக்கிக் கொள்ளலாம்.
மின் மோட்டார் பளு (எச்.பி.,) எந்த நேரத்திலும் அனுமதிக்கப்பட்ட எச்.பி.,க்கு மேல் இருக்கக்கூடாது.இந்த அனுமதி ஒரு முறை மட்டுமே தரப்பட வேண்டும். சேஞ்ச் ஓவர் சுவிட்ச் மூலமாக அனுமதிக்கப்பட்ட அனைத்து விவசாய செயல் மாற்றத்திற்கு ஒவ்வொரு முறையும் அனுமதி பெறத்தேவையில்லை.இவ்வாறு தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வருவதால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன் பெறுவர். அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-சுரேந்தர் கோவை கிழக்கு.
Comments