சுந்தராபுரத்தில் ஒருவழிப் பாதையில் நடக்கும் விபத்துகள்!! - கண்டுகொள்ளாத போக்குவரத்து காவல்துறை!!!!

       -MMH 


      சுந்தராபுரத்தில் ஒருவழிப் பாதையில் நடக்கும் விபத்து கண்டுகொள்ளாத போக்குவரத்து காவல்துறை!!!! -


     கோவை மாவட்டத்தில் வாகனப் போக்குவரத்து மிகவும் நெரிசலாக இருக்கிறது.ஆங்காங்கே போக்குவரத்து பணி மற்றும் பாலங்கள் பணி நடைபெற்று வருகின்றன. பொது மக்களுக்கு போக்குவரத்தில் விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு பல வழிகளையும் மாநகராட்சி செய்து வருகிறது.



     இந்த சூழ்நிலையில் கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் இருந்து ஆத்துப்பாலம் வழியாக சுந்தராபுரம் செல்லும் வழியில் இரு வழிப் பாதைகள் இருக்கின்றது . குறிச்சி பள்ளியின் அருகே சுந்தரா புரத்தில் இருந்து உக்கடம் போவதற்கு ஒரு பாதை இருக்கிறது. இதில் மக்கள் சரிவர பயணிக்காமல் சுந்தரா புரத்தில் இருந்து ஆத்துப்பாலம் வழியாக போகவேண்டிய வாகனங்கள் எதிர்மறையாக ஒரு வழிப் பாதையில் செல்கின்றன. விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.(one way)ஒருவழிப் பாதையில் செல்லாதீர்கள் என்று சொல்வதற்கும் ஒரு எச்சரிக்கை பலகையும் கிடையாது. அந்த பள்ளியின் அருகே பாதுகாப்பில்லாமல் நான்கு சக்கர வாகனங்களும் இரண்டு சக்கர வாகனங்களும் அதிகமாக சென்று கொண்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் விபத்து நடந்து கொண்டே இருக்கின்றது.



     இந்த சம்பவங்களை சுந்தராபுரம் குறிச்சி நகரப் பகுதி மக்கள் ஒவ்வொரு நாளும் கண்டு அச்சப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து காவல்துறை இதை கண்டுகொள்ளாமல் ஓர் எச்சரிக்கை பலகையாவது  வைக்காமல்  இருக்கின்றனர். போக்குவரத்து சிக்னல் அமைத்தாலாவது இந்த ஒரு வழி பாதையில் நடக்கும் விபத்துகளை தவிர்க்க இயலும் என்று குறிச்சி நகரப் பகுதி மக்கள் தெருவிக்கிறார்கள். 



-கிரி,கோவை மாவட்டம்.


Comments