கொள்ளையர்கள் கைது!! - ரூ. 9 லட்சத்துக்கு மேல் பறிமுதல்!!

       -MMH


      கோவை மாவட்டம் பொள்ளாச்சி நெகமம் பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவர்  கடந்த 15-ம் தேதி தனது வங்கி கணக்கில் இருந்து 2,94,000 ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.


          அப்போது, ஜெய்கணேஷ் வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம கும்பல் வாகனத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது.இந்நிலையில் உடுமலை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருசக்கர வாகனங்களில் வைத்திருக்கும் பணத்தை கொள்ளையடித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.      கைது செய்யப்பட்ட ராஜா, விஜய், ஆறுமுகம், காட்டு ராஜா ஆகிய நான்கு பேரிடமிருந்து பல்வேறு பகுதிகளில் கொள்ளையடித்த 9,84,000 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


 


Comments