மூல நோய் குணமாக்க துத்தி இலை!!
-MMH
மூல நோய் முற்றிலும் குணமாகும் 'துத்தி இலை' ஒன்று மட்டுமே போதுமானது. உள்மூலம் வெளிமூலம் சிலருக்கு மலம் கழிக்கும்போது ரத்தம் கலந்து வரும் இந்த வகையான மூலம் ஆசனவாயில் மலம்பையுடன் ஊர் கப்பு போன்று இணைந்து மலத்தை வெளியேற்ற எளிதாக இணைந்து செயல்படும் அந்த கப்பு போன்றபகுதியானது. சற்று அந்த இடத்தில் இருந்து நழுவி வெளியேறுவது வெளிமூலம் எனப்படும் இந்த வகையான மூலங்கள் பாதிக்கப்பட்ட மனிதன் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டியிருக்கும். ரத்தம் வெளியேறுதல் வலி ஏற்படுதல் உட்கார முடியாத நிலமை. இது ஏன் ஏற்படுகிறது என்றால் முதலில் உடலில் உஷ்ணம் அதிகமாக ஏற்படுவதாலும் அதிக அசைவ உணவு எடுப்பதாலும் மைதா போன்ற எளிதில் ஜீரணமாகாத உணவுகள் அதிகம் உண்பதாலும் காரமான பொருள்கள் அதிகம் எடுத்துக் கொள்வதாலும் இதுபோன்ற வெளிமூலம் உருவாகிறது. இதை நம் முன்னோர்களின் சித்த முறைப்படி மிகவும் எளிதாக வீட்டிலிருந்தபடியே சிலவே இல்லாமல் சரி செய்யும் ஒரு எளிதான முறை. நம் தெரு ஓரங்களிலும் குப்பை கூளங்கள் நிறைந்த பகுதிகளிலும் மானாவாரியாக தானாகவே வளர்ந்து இருக்கும் ஒரு தாவரம் தான் 'துத்தி செடி'. இந்த செடியானது அதன் காய்கள் பார்ப்பதற்கு ஒரு வட்ட வடிவிலான சீட்டினை போன்று இருக்கும். இலைகளை பறித்து நன்கு கழுவி அம்மியில் வைத்து அரைத்து. ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சுத்தமான பசு மாட்டு மோருடன் கலந்து பத்து நாட்கள் குடித்து வந்தால் மூலம் எளிதில் குணமாகும். அதுமட்டுமின்றி இந்தக் கீரையில் மிகவும் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் இக்கீரையை 15 நாட்களுக்கு ஒரு முறை இக்கீரையுடன் சம அளவு பருப்பு கலந்து கூட்டாகவோ அல்லது கடைந்தோ சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதனை அனைத்து வயதினரும் உண்ணக்கூடிய மிகவும் எளிதான ஓர் மருந்தாகும்.
-வினோத்குமார், கும்பகோணம்.
Comments