பசுவின் உயிரை பழிவாங்க காத்திருக்கும் பாலிதீன் பைகள்!!

    -MMH


     பசுவின் உயிரை பழிவாங்க காத்திருக்கும் பாலிதீன் பைகள், குப்பைகள் பொள்ளாச்சி குப்பை மேட்டை மேயும் பசுக்கள்...


     பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் சாலை ஓரங்களில் அதிக அளவில் மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் குப்பைகளை குவியல் குவியலாக கொட்டி வருகின்றன. ஒரு காலத்தில் பச்சைப் பசேல் என்று காணப்பட்ட பொள்ளாச்சி இப்போது அடுக்குமாடி கட்டிடங்கள், அதிக வாகன போக்குவரத்து போன்ற காரணங்களால் நவீனமயமாகக் காணப்படுகிறது.     இதனால் இயற்கை அன்னையின் மடியை நம்பி இருக்கும் ஆடு, மாடு, போன்ற உயிரினங்கள் தங்கள் மேச்சலுக்காக சாலை ஓரங்களில் சுற்றி திரிகின்றன.நுனிப்புல் கூட தென்படாத சாலைகளில் தங்கள் பசிப்பிணியை போக்கிக் கொள்ள குப்பை தொட்டியை தஞ்சம் அடைகின்றன.


     மக்கள் சிறிதும் பொறுப்பின்று தங்கள் வீட்டு கழிவுகளை பாலிதீன் கவரில் சுற்றி சாலை ஓரங்களில் வீசி செல்கின்றன அதில் இருக்கும் உணவை உண்ணும் ஆவலில் அந்த பாலிதீன் கவர்களையும் உணவாக்கி கொள்கின்றன. பசுக்கள் பசுமை உணவுகளை செரிக்கும் செரிமான மண்டலம் கொண்ட பசுவின் உடலை இந்த பாலிதீன் கவர்கள் பதம் பார்த்து பசுவின் உயிரை பரிகின்றன.     பசுமை உணவுகளை செரிக்கும் செரிமான மண்டலம் கொண்ட பசுவின் உடலை இந்த பாலிதீன் கவர்கள் பதம் பார்த்து பசுவின் உயிரை பரிகின்றன.


     ஆறறிவு கொண்ட மக்களை மட்டுமே நம்பி இருக்கும் கால்நடைகளுக்கு சாதகமாக செயல்படா விட்டாலும் அதன் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் மகா பாதக செயலான சாலைகளின் பாலிதீன் குப்பைகளை கொட்டுதல் போன்றவற்றை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.     இந்த பூமி நமக்கு மட்டுமல்ல  ஈ,எறும்பு முதல் நம்மை நம்பி உள்ள ஆடு, மாடு வரை உள்ள அனைத்து உயிருக்கும் இந்த பூமி பொதுவானது என்பதை உணர்ந்து அவற்றை பேணி காக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்டால் நாடும் ,வீடும் வளம் பெறும் என்ற சிந்தனையோடு,


நாளைய வரலாறு செய்திக்காக,


-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments