நான் என்ன நடிகனா....!! - வைரலாகும் முதல்வரின் பேச்சு!!

    -MMH


     நான் என்ன நடிகனா? என்கிட்ட எல்லாரும் என்ன சொல்றாங்க தெரியுமா?" திடீர் வைரலாகும் அசத்தல் பேச்சு!!


      "நான் என்ன நடிகனா? பெரிய பெரிய நடிகரா இருந்தால் விளம்பரம் கிடைக்கும். என்னை பார்க்கிறவங்க எல்லாம் என்கிட்ட என்ன சொல்றாங்க தெரியுமா" என்று முதல்வர் செய்தியாளர்களிடம் பேசிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.


     நேற்று திருவள்ளூர் கலெக்டர் ஆபீசில் வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, 12 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.


     7,520 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பிறகு செய்தியாளர்களை அரசின் பல திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும் செய்தியாளர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அது சம்பந்தமாக முதல்வர் சொன்னதாவது: "எல்லாமே உண்மை செய்திகள்.. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டும்.. அது உங்க கடமை. எப்படி நீங்க எங்ககிட்ட உரிமையா கேள்வி கேக்கறீங்க? நான் உரிமையா கேக்கல, அன்பா கேட்கறேன். நீங்கதான் பாலமாக இருந்து அரசு திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லணும். ஏன்னா, இவ்ளோ கஷ்டப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்து, நிதி ஆதாரத்தை பெருக்க, பல திட்டங்களை நடைமுறைப்படுத்திட்டு இருக்கோம். இதுபோய் மக்களுக்கு சேரணும். நான் பல பேரை பார்க்கும்போது, சார், நிறைய செய்யறீங்க, ஆனால் விளம்பரமே இல்லையேன்னு சொல்றாங்க.


     நான் என்ன நடிகனாவா இருக்கேன் விளம்பரம் செய்றதுக்கு? பெரிய பெரிய நடிகரா இருந்தால், எனக்கு விளம்பரம் கிடைக்கும். நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தவன். நீங்கதான் மக்களுக்கு அரசு திட்டங்களை கொண்டு போனால், அரசுக்கும் பேர் கிடைக்கும், எங்களுக்கும் பேர் கிடைக்கும்" என்றார்.


     முதல்வரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம், கமல் இந்த முறை தேர்தலில் போட்டியிட போகிறார். "தப்புன்னா தட்டி கேட்பேன்" என்றும் சொல்ல ஆரம்பித்துவிட்டார். ரஜினி எப்படியும் தேர்தலுக்குள் வந்துவிடுவார். அதனால் இவர்களில் யாரை முதல்வர் சொல்லி இருப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


நாளை வரலாறு செய்திகளுக்காக,


- J.U.ஃபைரோஸ் கான், செங்கல்பட்டு மாவட்டம்.


Comments