நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் சந்தையில் கொரோனா பரிசோதனை!! - மக்கள் மகிழ்ச்சி!!

     -MMH


      காய்கறியும் வாங்கியாச்சு: சோதனையும் முடிச்சாச்சு!!!


     திருப்பூர்:திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.திருப்பூரில் நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் பகுதி வாரியாக மருத்துவ குழுவினர் சென்று, கொரோனா தொற்று கண்டறியும், மாதிரி சேகரிப்பு முகாம் நடத்தி வருகின்றனர்.தென்னம்பாளையம் சந்தைப் பேட்டை வளாகத்தில் நேற்று இந்த நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சந்தைக்கு வருவோர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால், தங்கள் சளி மற்றும் ரத்த மாதிரியை கொடுத்து பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களைப் பகிர்ந்து கொண்டு தங்கள் மாதிரிகளை கொடுத்துச் சென்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-முஹம்மது ஹனீப், திருப்பூர்.


Comments