முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் பாதுகாப்பு..!!

    -MMH


     சென்னை:முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு காவல்துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடிப்படைவாதிகள், அதிருப்தியாளர்கள் மற்றும் தமிழ் ஆதரவாளர்கள் ஆகியோரால் ஆபத்து ஏற்படலாம் என்று காவல்துறைக்கு வந்த உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


     முதல்வர் பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதனை தமிழக காவல்துறையின் சிஐடி செக்யூரிட்டி பிரிவு கவனித்துவருகிறது. அவருடைய வீடு, தங்குமிடம், அலுவலகம் மற்றும் பயணப் பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்புப் பணிகளில் 24 மணி நேரமும் ஆயுதப் படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


     உளவுத்துறையின் எச்சரிக்கை நேற்று காவல்துறைக்குக் கிடைத்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போதுள்ள சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில்கொண்டு முதல்வருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


    இன்று கூடிய செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற முடிவில் முரண்பாடுகள் காரணமாக பிரச்னை ஏற்படலாம் என்றும் உளவுத்துறை எச்சரிக்கை செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.


-சோலை, சேலம்.


Comments