திருப்பூரில் மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு!-வடிகால் வசதி ஏற்படுத்த மக்கள் கோரிக்கை..!

        -MMH


      திருப்பூர் மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுவதால், வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், புகார் மனுக்கள் பெறப்பட்டன. தொட்டியமண்ண ரை, எம்.ஜி.ஆர்., காலனிமக்கள் கொடுத்த மனுவில், 'எம்.ஜி.ஆர்., காலனியில், ஒருபுறம் மட்டும் சாக்கடை கால்வாய் உள்ளது; மறுபுறம் இல்லை. ரோடு, இரண்டு அடிக்கு பள்ளமாக உள்ளது.மழை காலத்தில், மழைநீர் வெளியேற வழியில்லாமல் ரோட்டில் தேங்கி, சுகாதாரகேடு ஏற்படுகிறது. தொற்று பரவாமல் தடுக்க, விரைவில் ரோடு சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்' என கூறியிருந்தனர்.


    இ.கம்யூ., முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் கொடுத்த மனுவில், 'மாநகராட்சியின், 24வது வார்டில், முதல் ரயில்வே கேட் பகுதியில் துவங்கி, திருநீலகண்டபுரம் வரை, பல பகுதியில் தெருவிளக்கு எரிவதில்லை. கடந்த, 10 நாளாக இருள் சூழ்ந்துள்ளது; விரைவில் சீரமைக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார்.அனுப்பர்பாளையம், நடராஜா லே - அவுட் மக்கள் கொடுத்த மனுவில், 'மாநகராட்சி நிர்வாகம், டி.டி.பி., மில் ரோடு பகுதியில், புதிய தார்ரோடு அமைக்க, பூமி பூஜை நடத்தியது. ஏழு ஆண்டு கடந்துவிட்ட பின்பும் பணி நடக்கவில்லை ' என கூறியிருந்தனர்.


நாளையவரலாறு செய்திக்காக


-HM.முஹம்மது ஹனீப் திருப்பூர்.


Comments