தபால் அலுவலகத்தில் 'செல்வ மகள் திட்டத்தை' பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் !!

     -MMH


     பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக செல்வ மகள் திட்டம் தொடங்கப்பட்டது. பிரிவு 80 சி இன் கீழ் வருமான வரி சலுகையுடன் இந்த திட்டம் வருகிறது. இதில் திரும்ப கொடுக்கப்படும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு பொருந்தும் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. தற்போது, நியமிக்கப்பட்ட தபால் நிலைய கிளைகளில் செல்வ மகள் திட்டம் கணக்கில் (சுகன்யா சமிர்தி திட்டம்) முதலீடு செய்ய 7.6 சதவீத விகிதத்தில் வட்டி கிடைக்கிறது.


     தபால் அலுவலகத்தில் செல்வ மகள் திட்டத்தை (சுகன்யா சமிர்தி திட்டம்) பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து காண்போம்.


தகுதி:


     ஒரு சட்டப்பூர்வ பாதுகாவலர் / இயற்கை பாதுகாவலர் அதாவது பெற்றோர் பெண் குழந்தையின் பெயரில் SSA-வை திறக்க முடியும். பெற்றோர் ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரு கணக்கையும், இரண்டு வெவ்வேறு பெண் குழந்தைகளின் பெயரில் இரண்டு கணக்குகளை மட்டுமே திறக்க முடியும்.


     பிறந்த தேதி முதல் 10 வயது வரை மட்டுமே கணக்கைத் திறக்க முடியும் என்று இந்தியா போஸ்ட் தெரிவித்துள்ளது. இன்ட்ரா ஆபரபில் நெட் பேங்கிங் மற்றும் இந்தியா போஸ்ட் சேமிப்புக் கணக்கு மூலம் ஆன்லைன் வைப்பு வசதி கிடைக்கிறது.கணக்கை திறக்க வைப்புத்தொகையாளரின் அடையாளம் மற்றும் குடியிருப்பு ஆதாரம் தொடர்பான பிற ஆவணங்களுடன், பெண்ணின் பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றை தபால் அலுவலகம் அல்லது வங்கியில் கணக்கு திறக்கும் நேரத்தில் பாதுகாவலரால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


முதலீட்டு வரம்புகள்:


     நீங்கள் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250 ஐ டெபாசிட் செய்ய வேண்டும். ஆனால் ஒரு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்த பணம் ரூ.1.5 லட்சத்தை தாண்டக்கூடாது. கணக்கில் அடுத்தடுத்த வைப்புத்தொகை ரூ.50 மடங்காக செய்யப்படலாம். இருப்பினும், ஒரு மாதத்தில் அல்லது நிதியாண்டில் வைப்புகளின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை. கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் வரை கணக்கில் வைப்புத் தொகை செய்யலாம். 9 வயது குழந்தைக்கு கணக்கு தொடங்கினால் 24 வயதாகும் வரை வைப்புத்தொகை தொடர வேண்டும்.


     24 முதல் 30வயதிற்கு இடையில் (கணக்கு முதிர்ச்சியடையும் போது) கணக்கு மீதமுள்ள வட்டிக்கு சம்பாதிக்கிறது.டெபாசிட் செய்யவில்லை என்றால் அபராதம் கட்டாயம் கட்ட வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250 தொகை டெபாசிட் செய்யப்படாவிட்டால் கணக்கு நிறுத்தப்படும். மேலும் அந்த ஆண்டுக்கான வைப்புத் தொகைக்குத் தேவையான குறைந்தபட்ச தொகையுடன் ஆண்டுக்கு ரூ.50 அபராதத்துடன் புதுப்பிக்க முடியும்.


வயது வரம்பு:


     21 ஆண்டுகள் முடிந்ததும் எஸ்.எஸ்.ஏ மூடப்படலாம்.


பணம் திரும்பப் பெறுதல் / கணக்கு மூடல்:


     குழந்தையின் உயர் கல்வி செலவுகளின் தேவையை பூர்த்தி செய்ய பகுதி தொகையை திரும்பப் பெறும் முறை அனுமதிக்கப்படுகிறது. கணக்கு வைத்திருப்பவர் 18 வயதை எட்டிய பிறகு, முந்தைய நிதியாண்டின் முடிவில் உள்ள நிலுவைத் தொகையில் அதிகபட்சம் 50 சதவீதம் வரை எடுக்கலாம். அதுவே, 18 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு திருமணத்தின் காரணமாக முன்கூட்டியே கணக்கு மூடப்படுவதும் அனுமதிக்கப்படும். (திருமணத்திற்கு 1
மாதம் அல்லது 3 மாதங்களுக்கு முன்னர்).


கணக்கை மாற்றும் முறை:


     கணக்கு திறக்கப்பட்ட பெண் குழந்தை பிறந்த நகரத்தைத் தவிர இந்தியாவில் எங்கிருந்தும் வேறு இடத்திற்கு கணக்கை மாற்ற முடியும். பெற்றோர் / பாதுகாவலர் அல்லது கணக்கு வைத்திருப்பவரின் வசிப்பிடத்தை மாற்றுவதற்கான ஆதாரங்களை வழங்குவதன் மூலம் இடமாற்றம் இலவசமாக செய்து தரப்படும். அத்தகைய ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்கப்படாவிட்டால், விண்ணப்பதாரர் தபால் அலுவலகம் அல்லது இடமாற்றம் செய்யப்பட்ட வங்கிக்கு ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும்.


-சுரேந்தர்,கோவை கிழக்கு.


Comments