பெருமாளுக்கு உகந்த பாபாங்குச ஏகாதசி!!

     -MMH


     ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11ம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப் படுகின்றன. அந்த நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்ள வேண்டும். மாதத்தில் இரண்டு என வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றனவாம். அவற்றின் பெயர் முறையே;



1. சித்திரை வளர்பிறை ஏகாதசி காமதா ஏகாதசி


2. சித்திரை தேய்பிறை ஏகாதசி பாப மோசனிகா ஏகாதசி


3. வைகாசி வளர்பிறை ஏகாதசி மோகினி ஏகாதசி


4. வைகாசி தேய்பிறை ஏகாதசி வருதினி ஏகாதசி


5. ஆனி வளர்பிறை ஏகாதசி நிர்ஜல ஏகாதசி


6. ஆனி தேய்பிறை ஏகாதசி அபரா ஏகாதசி


7. ஆடி வளர்பிறை ஏகாதசி விஷ்ணு சயன ஏகாதசி


8. ஆடி தேய்பிறை ஏகாதசி யோகினி ஏகாதசி


9. ஆவணி வளர்பிறை ஏகாதசி புத்திரத ஏகாதசி


10. ஆவணி தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி 11. புரட்டாசி வளர்பிறை ஏகாதசி பரிவர்த்தன ஏகாதசி


12. புரட்டாசி தேய்பிறை ஏகாதசி அஜ ஏகாதசி


13. ஐப்பசி வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி


14. ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திரா ஏகாதசி


15. கார்த்திகை வளர்பிறை ஏகாதசி பிரபோதின ஏகாதசி


16. கார்த்திகை தேய்பிறை ஏகாதசி ரமா ஏகாதசி


17. மார்கழி வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி


18. மார்கழி தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசி


19. தை வளர்பிறை ஏகாதசி பீஷ்ம, புத்திர ஏகாதசி


20. தை தேய்பிறை ஏகாதசி சபலா ஏகாதசி


21. மாசி வளர்பிறை ஏகாதசி ஜெய ஏகாதசி


22. மாசி தேய்பிறை ஏகாதசி ஷட்திலா ஏகாதசி


23. பங்குனி வளர்பிறை ஏகாதசி ஆமலகி ஏகாதசி.


24. பங்குனி தேய்பிறை ஏகாதசி விஜயா ஏகாதசி.


24. பங்குனி தேய்பிறை ஏகாதசி விஜயா ஏகாதசி.


25. அதிக ஏகாதசி கமலா ஏகாதசி.



     ஒரு வருடத்தில் வரும் அனைத்து ஏகாதசி களிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.


     சரி! இந்த செய்தியெல்லாம் இப்பொழுது எதற்கு என்றுதானே கேட்கிறீர்கள்!


     மக்களே! இன்று ஐப்பசி மாத வளர்பிறை பாபாங்குசா ஏகாதசி! இன்றைய விரதம் பாவங்களைப் போக்கும்! கங்கையில் நீராடிய பலனைக் கொடுக்கும்! நோய், பசிப்பிணி நீங்கும்! வாழ்வில் நிம்மதி நிலைக்கும்.


மீண்டுமொரு சுவாரஸ்ய செய்தியுடன் சந்திக்கலாம்,


-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.


Comments