1.ம் தேதி முதல் பொள்ளாச்சி கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்!!!

     -MMH


          பொள்ளாச்சி கோட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய வனச்சரகங்களில் நாளை முதல் புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்க உள்ளது.


          இந்த கோட்டத்தில் இரண்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஒரு கிரிட் லைன் அமைக்கப்படும். அதில் ஒரு கிரிட் லைனுக்கு இரண்டு கேமராக்கள் பொருத்தப்படும். பொள்ளாச்சி கோட்டத்தில் மட்டும் 245 கிரிட் லைன்கள் அமைக்கப்பட்டுள்ளது.


           மொத்தமாக 490 கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பின் போது புலிகளின் எண்ணிக்கை மட்டுமின்றி, புலிகளின் கால் தடம், எச்சம் மற்றும் கீரல்கள் போன்றவைகளும் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


           இது தொடர்பான அறிமுக மற்றும் புத்தாக்க பயிற்சி வகுப்புகளளும் நாளை காலை 11:00 மணி அளவில் அட்டகட்டி வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது இந்த புலிகள் கணக்கெடுப்பில் 25 நாட்களுக்கு தொடர்ந்து வனப்பணியாளர்கள் களப்பணியை மேற்கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments