நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வைக்கலாம்!! -முதல்வர் அறிவிப்பு!!

     -MMH 


     தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வைக்கலாம்.. அரசு அதிரடி அனுமதி


      சென்னை: தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி வழங்கியுள்ளார்.


     பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகள் திறப்பு நேரம் இரவு 9 மணிக்கு பதிலாக இனிமேல் இரவு10 மணி வரை நீட்டிக்க படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.     காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் என்று அழைக்கப்படும் கண்டைன்மெண்ட் ஏரியாக்களை தவிர்த்த பிற அனைத்து பகுதிகளுக்கும் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வரும்


     தசரா, தீபாவளி என வரிசையாக பண்டிகை காலம் வருவதால், பொதுமக்கள் அதிக அளவுக்கு சந்தைகளுக்கும் பொருட்கள் வாங்க வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, கூடுதலாக ஒரு மணி நேரம் கடைகளை திறந்து இருக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.


-B.செந்தில் முருகன்,சென்னை தெற்கு.


Comments