பொள்ளாச்சி பள்ளிகளில் வழங்கப்படும் 10 முட்டைகள்!!
-MMH
கோரோனா ஊரடங்கு காரணமாக அரசு,மற்றும் தனியார் பள்ளிகள் கடந்த ஏழு மாதங்களாக மூடப்பட்டு உள்ளன,இருப்பினும் பள்ளிகளில் வழங்க படும் சத்துணவை நம்பி பல ஏழை எளிய மாணவ மாணவியர் உள்ள நிலையில், கோரோனோ காரணமாக மூடப்பட்ட பள்ளிகளில் சத்துணவு சேவை நிறுத்தி வைக்க பட்டு இருந்தது,இதனால் மாணவ மாணவியர் பசியில் வாடாமல் இருக்க தமிழக அரசு உணவு செய்வதற்கான அரிசி ,பருப்பு ,காய்கறிகள் போன்றவற்றை பள்ளிகள் மூடப்பட்ட நிலையிலும்,உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி மாணவ மாணவிகளுக்கு வழங்கி வந்தது.
அதன் பிறகு தமிழக அரசு மாணவ மாணவிகளுக்கு சத்துணவு முட்டைகளையும் சேர்த்து வழங்கும் மாறு அரசனை பிறப்பித்தது. அதன் படி பொள்ளாச்சி தெற்கு மண்டல அரசு பள்ளிகளில் சத்துணவு பணியாளர்கள் மூலம் அதிகாரிகள் முன்னிலையில் சுமார் 4380 மாணவ மாணவியர் களுக்கு சத்துணவு முட்டைகள் வழங்கப்படன.
மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் " தமிழக அரசு அறிவுறுத்தலின் படி முக்கவசம் , சனிடைசர், சமூக இடைவெளியை மாணவ மாணவியர் முறையாக பின்பற்றுதல் போன்றவற்றை உறுதி செய்யப்பட்டு பின்னர் மாணவ மாணவியர் ஒவ்வொருவருக்கும் தால 10 முட்டைகள் வீதம் வழங்க படுவதாகவும் , தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை மாதம் ஒரு முறை மாணவ மாணவியர் களுக்கு சத்துத்துணவு பொருட்களான அரிசி, பருப்பு,காய்கறிகள் உடன் 10 முட்டைகளும் சேர்த்து வழங்க படும் எனவும் கூறினர்.
பள்ளிக்கு சென்றால் குறைந்த பச்சம் ஒருவேளை உணவாவது உண்ணமுடியும் என்பதற்காக பள்ளிக்கு வரும் ஏழை எளிய மாணவ மாணவியர் களுக்கு கொரோன ஊராடங்கில் சத்துணவை வழங்கும் தமிழக அரசின் இந்த திட்டத்தை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்று உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.
Comments