வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு சீல்!! - மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை!!

     -MMH


     கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
கடைகள் நடத்தி வருபவா்கள் முறையாக வாடகை செலுத்தாத பட்சத்தில், அவா்கள் மாநகராட்சியில் செலுத்தியுள்ள முன் பணத்தில், வாடகை பணம் கழிக்கப்பட்டு, அதன் பிறகு அக்கடைகளுக்கு அதிகாரிகளால் சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


       அதன்படி, மத்திய மண்டலம் 72ஆவது வாா்டு, தொட்டராயன் கோயில் பகுதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள இரும்புக்கடை , உணவகம் ஆகிய 2 கடைகளின் உரிமையாளா்கள் கடந்த 6 மாதங்களாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனா்.


        இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில், மத்திய மண்டல உதவி ஆணையா் கனகராஜ் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் வாடகை செலுத்தாத உணவகம், இரும்புக் கடைக்கு வியாழக்கிழமை சீல் வைத்தனா். மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை நிலுவையில் உள்ள மற்ற கடைகளுக்கும் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments