நாகலிங்க மரத்தை பற்றித் தெரிந்து கொள்ளலாம் !!

        -MMH


     நாகலிங்க மரம் பெயரே வித்தியாசமாக இருக்கிறது. தெரிந்தவர்கள் இருந்தால் சந்தோசம் தெரியாதவர்களாக இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள். இதனுடைய மருத்துவக் குணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.


     இதன் இலைகளை மையாக அரைத்து பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவி வந்தால் விரைவில் குணமுண்டாகும். மேலும் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவினால் புண்கள் ஆறும்.     இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட்டால்  பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.


Comments