இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! - 4 பேர் உடல் நசுங்கி பலி!!

    -MMH


   இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 4 பேர் உடல் நசுங்கி பலி!! - மேட்டுப்பாளையம் சத்தி சாலையில் சிறுமுகை அடுத்த பெதிகுட்டை பகுதியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் காரில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.


   கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் துரை மகன் ராஜன் (வயது 46), நவீன்குமார் (வயது 46), அரவிந்தன் (வயது 45), காரமடை அருகே பிளிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 47) இவர்கள் 4 பேரும் சத்தியில் இருந்து சிறுமுகை நோக்கி காரில் சனிக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தனர்.


  அப்போது பெத்திக்குட்டை அருகே வந்தபோது சிறுமுகையில் இருந்து சத்தி நோக்கி சென்ற காரில் நேருக்கு நேர் மோதினர். இதில் சிறுமுகையில் இருந்து சக்தி நோக்கி வந்த காரில் கோவை வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் கௌசில், சிறுமுகை பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் பென்ஜில், இதே பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் தேவன்ந்த் ஆகியோர் பயணித்திருந்தனர்.


   விபத்தில் சத்தியிலிருந்து சிறுமுகை நோக்கி காரில் வந்த ராஜன், நவீன்குமார், அரவிந்தன், மோகன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே காரில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.


 இதுகுறித்து தகவலறிந்த ஏ.டி.எஸ்.பி கார்த்திக்விஜய், பெரியநாயக்கன்பாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, சிறுமுகை காவல் ஆய்வாளர் இளங்கோ மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


   இதில் சிறுமுகையில் இருந்து சத்தி நோக்கி காரில் சென்ற கௌசில், பென்ஜில், தேவன்ந்த் ஆகியோர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் இதுகுறித்து சிறுமுகை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


-ஈஷா,கோவை.


Comments