வீட்டின் பூட்டை உடைத்து 43 1/2 பவுன் நகை மற்றும் லேப்டாப்பை திருடி சென்ற கொள்ளையர்கள்!!

     -MMH


     கோவை போத்தனூர் முத்தையா நகர் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி நகரில் நிகாஷ் என்பவரது வீட்டில் 43 1/2 பவுன் நகை மற்றும் ஒ௫ லேப்டாப் தி௫ட்டு!!- போத்தனூர் காவல்துறையினர் விசாரணை!!


     வீட்டின் பூட்டை உடைத்து 43 1/2 பவுன் நகை மற்றும் லேப்டாப் பை திருடி சென்ற கொள்ளையர்கள்.
 
     கோவை சுந்தராபுரம் முத்தையாநகர் அருகே வேளாங்கண்ணி நகர் பகுதியில் வசித்து வருபவர் நிகாஸ்(27). சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் பிரசவதிற்க்கு தனது சொந்த ஊரான காங்கேயம் சென்று இருந்தார்.


     இந்நிலையில் கடந்த 24ம் தேதி மனைவியை பார்க்க காங்கேயம் சென்ற விகாஸ் அங்கிருந்து நேராக பணிக்கு சென்று உள்ளார்.நேற்று மதியம் அருகில் வசிப்பவர்கள் வீட்டின் முன் கதவு திறந்த நிலையில் இருப்பதாக தகவல் தெரிவித்து உள்ளனர்.இதனையடுத்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரேவில் வைக்கபட்டு இருந்த நாற்பத்து மூன்று அரை பவுண் நகை மற்றும் லேப்டாப் திருடு போயுள்ளது தெரியவந்தது.


     இதனையடுத்து போத்தனூர் காவல் நிலையத்தில் விகாஸ் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்துள்ள குற்றபிரிவு போலீசார் கொள்ளை சம்பவத்தில ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர். வீட்டின் கதவு பூட்டபட்டு இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.குடியிருப்புகள் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அருகில் வசிப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


-சீனி,போத்தனூர்.


Comments