முதலமைச்சர் அறிவிப்பு! 46 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு...!

    -MMH


தமிழ்நாட்டில் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 49 ஆயிரம் பேர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


நடைபெற்ற 3-வது உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பல்வேறு நிலைகளில் நிலுவையில் இருந்த 26 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அனுமதியளிக்கப்பட்டது. இதன்மூலம் ரூ.25,213 கோடி அளவில் தொழில் முதலீடுகள் செயல்பாட்டிற்கு வந்து 49,003 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்," என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


இந்த உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், பா.பென்ஜமின், தலைமைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் துறைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.


-ஸ்டார் வெங்கட்.


Comments