கோவையில் முதியவர் அடித்து கொலை! - குற்றவாளிகள் கைது..!

     -MMH


    கோவை சிங்காநல்லூர் முதியவர் கொலை வழக்கில் - இரண்டு பேர் கைது கோவை சிங்காநல்லூர் பகுதியில் 83 வயது முதியவரை கொலை செய்து விட்டு பணம், நகை காருடன் தப்பிச் சென்ற இரண்டு பேரை காரைக்குடி தனியார் விடுதியில் போலீஸார் மடக்கி பிடித்தனர்.


  சிங்காநல்லூரை சேர்ந்த கிருஸ்ணசாமி (83) என்பவர் நேற்று மர்ம நபர்களால்  கொடூரமான முறையில் கொலைச் செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை  தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.


  இந்நிலையில் கொலையான கிருஸ்ணசாமி செல்போன் டவர் மூலம் கண்காணித்த போலீஸார் கொலை செய்த மர்ம நபர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பதுங்கி இருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து காரைக்குடி போலீஸாருக்கு கார் எண் மற்றும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.


 இதையடுத்து காரைக்குடி தெற்கு போலீஸார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கோவையில் மாயமான கார் காரைகுடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. காரில் ஒரு தனியார் விடுதியின் அடையாள அட்டையை பார்த்த போலீஸார் அந்த விடுதிக்கு சாதாரண உடையில் சென்று இரண்டு பேர் தங்கி இருப்பதை உறுதி செய்தனர்.


 இதையடுத்து இரண்டு பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சியான தகவல் வெளியானது.கைது செய்யப்பட்ட விகரம் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றுள்ளார்.


 அங்கு பழக்கமான வாட்மேன் கிருஸ்ணசாமி வீட்டில் தனியாக வாழ்ந்து வருவது குறித்து தகவலை பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சிறையில் வெளியே வந்தது தெரியவந்துள்ளது. பின் வெளியே வந்த நண்பரான செல்வகணபதியோடு சேர்ந்து கிருஸ்ணசாமியின் வீடு புகுந்து தாக்கி கொலை செய்து விட்டு நகை, பணம் எடுத்து தப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து கோவையில் இருந்த சென்ற ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் இருவரை கோவை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.


-Ln.இந்திராதேவி,சீனிவாசன்,சோலை.


Comments