கோவையில் காற்று தரம் கண்காணிப்பு நிலையம்!! காணொளியில் முதல்வர் துவக்கம்..!!

     -MMH


கோவையில் காற்று தரம் கண்காணிப்பு நிலையம்!!! காணொளியில் முதல்வர் துவக்கம் ... 


     கோவை பி.எஸ்.ஜி.,கலை, அறிவியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள தொடர் காற்றுத்தர கண்காணிப்பு நிலையத்தை 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். சர்வதேச அளவில் காற்று மாசினால் உயிரிழக்கும் மக்கள் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது. ஒரு லட்சம் பேரில், 195 பேர் காற்று மாசினால் உயிரிழக்கின்றனர்.காற்றின் ஒட்டுமொத்த நுண்துகள் தரக்குறியீடு, 100-200 என்ற அளவில் இருந்தால் மிதமான பிரிவு; 201-300 என்றால் மோசம்; 301-400 மிக மோசம், 401-500 என்ற அளவில் இருந்தால் கடுமையான அளவு என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.கோவை, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில்காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்கும் நிலையத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினர் நிறுவியுள்ளனர்முதல்வர் பழனிசாமி, 'வீடியோ கான்பரன்சிங்' முறையில் நேற்று திறந்து வைத்தார். 


     மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'இந்த தொடர் காற்றுத்தர கண்காணிப்பு நிலையம் மூலம், இப்பகுதியின் காற்று தரத்தை தொடர்ந்து, 24 மணி நேரமும் கண்காணிக்கப் படும். காற்றின் மாசு அளவு, காற்றின் நுண்துகள் அளவுகளை 'டிஜிட்டல் பேனல்' மூலம் தொடர்ந்து தெரிவித்து கொண்டே இருக்கும். அவிநாசி ரோட்டில் செல்லும் அனைவரும் இதை காணும் வகையில், அமைக்கப்பட்டுள்ளது. காற்றின் தரத்தையும், காற்று மாசு தொடர்பான வழிப்புணர்வையும் ஏற்படுத்த திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது' என்றனர்.கல்லுாரி முதல்வர் பிருந்தா கூறுகையில், 'இங்கு ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை காற்றின் தரம் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு, சென்னை மாசு கட்டுப்பாடு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றார்.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments