பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

      -MMH


       நாட்டின் வளர்ச்சியை தீர்மானிபதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கல்வியறிவு இருக்கின்றது. எந்த நாடு கல்வியில் சிறந்து விளங்குகின்றதோ. அந்த நாடே வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் நாடு என பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.


        அந்த வகையில் தான் ஒவ்வொரு நாடும் கல்விக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து கல்வியை அனைத்து மாணவர்களிடம் கொண்டு செல்வதற்கு பல்வேறு திட்டங்களையும், உதவிகளையும் செய்து வருகின்றனர்.


        அந்த வகையில் ஒவ்வொரு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவ, மாணவிகள் www.scholarships.gov.inஎன்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


        பள்ளி மாணவர்கள், ஐடிஐ, பாலிடெக்னிக், மருத்துவம், செவிலியர், ஆசிரியர் பட்ட படிப்பு, இளங்கலை முதுகலை படிப்பு, தொழில் கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பயில்பவர்கள் விண்ணப்பிக்கலாம் கடைசி தேதி அக்டோபர் 31 என தெரிவிக்கப்பட்டுள்ளது.


-ஸ்டார் வெங்கட்.


Comments