தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் சதய விழா!!

     -MMH


     தஞ்சை பெரியகோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் ராஜ ராஜ சோழனின் சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜராஜ சோழன் சதய நட்சத்திரத்தில் பிறந்ததால்  ஐப்பசி மாதம்அந்த நட்சத்திரம் வரும் நாளில் ஆண்டுதோறும் விழா நடைபெறுவது வழக்கம்.


     ஒவ்வொரு ஆண்டும் பட்டிமன்றம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் என நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஒரு நாள் மட்டுமே எளிய முறையில் சதயவிழா நேற்று நடைபெற்றது. ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. பின்னர் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு திருவேற்காடு கருமாரிபட்டர் அய்யப்ப சுவாமிகள் சார்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டன.


     48 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது பின்னர் தொடர்ந்து தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறை நூலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, கோவிலின் உள்பிரகாரத்தில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் நந்தி மண்டபத்தில் ஓதுவார்கள் அமர்ந்து பாராயணம் பாடினர். குஜராத்தில் இருந்து மீட்டு வரப்பட்ட ராஜராஜசோழன், உலோகமாதேவி சிலை முன்பு புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவாச்சாரியர்கள் சிறப்பு யாகம் செய்தனர். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்,விஜயதசமிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


நாளைய வரலாறு பத்திரிக்கைக்காக,   


-V.ராஜசேகரன்,தஞ்சாவூர்.


Comments