இரண்டாவது ஆவது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்..!
-MMH
தாராபுரத்தில் உயா் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள ரெட்டிபாளையம் பிரிவு, தாராபுரம் வட்டம் ஆலாம்பாளையம் ஆகிய இடங்களில் உயா் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.
இந்நிலையில், இரு இடங்களிலும் 2ஆவது நாளாக விவசாயிகள் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலாம்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக எம்.பி.க்கள் கே.சுப்பராயன் (திருப்பூா்), கணேசமூா்த்தி (ஈரோடு), தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் வழக்குரைஞா் ஈசன், கொள்கை பரப்புச் செயலாளா் சிவகுமாா், ஒருங்கிணைப்பாளா்கள் தனபால், குமாரவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நாளையவரலாறு செய்திக்காக
-முஹம்மது ஹனீப் திருப்பூர்.
Comments