முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு !! - அதிமுக குஷி !!

      -MMH


         தமிழகத்தில் அதிமுகவில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்என்று ஓபிஎஸ் இபிஎஸ் என இருவருக்கும் கடும் மோதல் ஏற்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வந்த நிலையில் சாமானிய மக்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
        இதனால் அதிமுகவில் இரு பிரிவினராக பிரிந்து செயல்படுவார்கள் என பிற கட்சித் தலைவர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்த எதிர்பார்ப்புகளை தாண்டி 
வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அஇஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி.கே.பழனிசாமி அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.



        இதனால் அதிமுகவில் விரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது இவர்கள் இருவருக்கும் பிரச்சனை முற்றி நீயா நானா என்ற அளவுக்கு போய் நிற்கும் அந்தப் பிரச்சினையை மையமாகக் கொண்டு பலபேர் நாற்காலிக்கு ஆசைப்பட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன . இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இது ஒரு பக்கம் இருந்தாலும் இபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களுடைய அணிதான் பலம் பெற வேண்டும் தங்களுடைய அணியைச் சேர்ந்தவர் தான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என தெரிவித்து வந்த நிலையில் என்ன நடந்தது என்ற கேள்வியும் இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று கேள்வியும் அரசியல் நடுநிலை வாதிகளிடம் எழுகிறது. 


        பன்னீர் செல்வம் அவர்களின் ஆதரவாளர்கள்
வருத்தத்தில் இருந்தாலும் பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் ஒட்டுமொத்த அஇஅதிமுக பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,
-M.சுரேஷ் குமார்,கோவை தெற்கு.


Comments