ஊர் காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்!!

     -MMH


     கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஊர் காவல் படையில் சேர இளைஞர்களும் பெண்களும் விண்ணப்பிக்கலாம் என டிஎஸ்பி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


     காவல்துறை அதிகாரிகளுக்கு துணையாகவும், முக்கியமான பொது இடங்களுக்கு பாதுகாப்பாகவும் ஊர்க்காவல் படையினர் மிகப்பெரும் துணையாக இருக்கிறார்கள். பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 
தாலுக்கா காவல் நிலையம் பின்புறம் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வரும் 18-ம் தேதி வரை விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகின்ற 20-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 


     18 வயது  முதல் 45 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு மற்றும்  குற்றப் பின்னணி இருக்கக்கூடாது  கல்வித் தகுதிக்கான சான்றிதழ்,ஆதார் கார்டு,ரேஷன் கார்டு,உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ் குமார்,கோவை தெற்கு.


Comments