பொள்ளாச்சி அருகே R.T.O. சோதனைச் சாவடியில் யாருக்கோ காத்து கிடக்கும் குப்பை..!

     -MMH


பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த வளர்ந்தாயமரம் என்ற ஊர் மீன்கரை சாலையில் அமைந்துள்ளது இப்பகுதியில்
RTO போக்குவரத்து சோதனைச் சாவடி அலுவலகம் உள்ளது இந்த அலுவலகம் சில மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடத்தில் செயல்பட தொடங்கியது.


தொடங்கிய நாளிலிருந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும் முதலில் இங்கு 150 வருட பழமையான ஆலமரம் கம்பீரமாய் நின்றிருந்தது அலுவலகத்துக்கு இடையூறாக இருந்து வந்தது ஒரு வழியாக அதை வெட்டி விட்டார்கள் சில வாரங்களுக்கு முன்பு இரண்டாவது வெட்டிய மரத்தை அப்புறப்படுத்தாமல் சில நாட்கள் அங்கேயே கிடந்தது இதுவும் அலுவலகத்திற்கு இடையூறாகஅதையும் ஒரு வழியாக எடுத்து விட்டார்கள்.



ஆனால் மரத்தை எடுத்தவர்கள் அதன்  சருகுகளை எடுக்க மறந்து விட்டனர் என்று சொல்ல முடியாது இதற்கு விலை இல்லை அவ்வளவுதான் மூன்றாவது வெட்டிய மரத்தின் அடிப்பகுதியை எடுக்காமல் அப்படியே விட்டு விட்டனர் இதுவும் அலுவலகத்திற்கு இடையூறாக இருந்து வருகிறது நான்காவதாக குடிநீர் குழாய் உடைந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குடிநீர் ரோட்டில் வீணாகி போய்க் கொண்டிருக்கிறது.



அதற்கு தடுப்பு அமைத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது என்கிறார்கள் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மேலும்  அலுவலகம் முன்பு ஒருபுறம் குடிநீர் உடைந்து வீணாகிக் கொண்டிருக்கிறது இன்னொரு புறம் சருகுகள் அல்ல படாமல் குப்பை போல் கிடைக்கிறது அலுவலகம் நேர் எதிரே மரத்தின் அடிப்பகுதியை எடுக்காமல் அப்படியே விட்டு விட்டனர் அலுவலகத்துக்கு வழித்தடம் எது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக


-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.


Comments