விபத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் கோவைபுதூர் பிரிவு!! - ஆளில்லாத சிக்னல்!!!!

     -MMH


     கோவை மாவட்டத்தில் பாலக்காடு சாலையில் கோவைபுதூர் முக்கிய சாலையில் உள்ள கோவைபுதூர் பிரிவு பகுதியில் போக்குவரத்து அதிகமுள்ள சாலையாகும். மேலும் அங்கே கிருஷ்ணா கல்லூரி மற்றும் வி எல் பி ஜானகி அம்மாள் கல்லூரியும் நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் அமைந்த பகுதியாகவும் மாணவ-மாணவிகள் அதிகம் பேர் பயணிக்கும் மேற்பார்வையும் இல்லாமல் வாகனங்கள் கடந்து செல்வதால் அந்த மூன்று வழி பாதைகளில் ஏகமாய் விபத்துகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதை போக்குவரத்து அதிகாரிகளோ அல்லது காவல்துறையினரோ கண்டுகொள்வதில்லை.


   சிக்னல் இருக்கிறது ஆனால் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் யாராவது இருந்து போக்குவரத்து வாகனங்கள் கடந்து செல்வதை சரி செய்தால் தான் அந்த விபத்துக்களை தவிர்க்க முடியும் என்று கோவைப்புதூர் சுற்றுவட்டார பகுதி மக்களும் கல்லூரி மாணவ மாணவியர்களும் கூறுகின்றனர்.இதில் விசேஷம் என்னவென்றால் அந்தப் பிரிவில் அருகேதான் நமது மேற்கு ஆர்டிஓ அலுவலகம் இயங்கிக் கொண்டு வருகிறது .


      மேலும் இந்த கோவைபுதூர் பகுதி அருகே தான் நமது முக்கிய அமைச்சரின் வீடும் இருக்கிறது. இத்தகைய உயர் அதிகாரிகள் அருகிலுள்ள பகுதியில்தான் இந்த அவல நிலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.


        நாளைய வரலாறு புலனாய்வு இதழின் பார்வைக்கு அந்த சுற்று வட்டார மக்கள் கொண்டு சென்று இருக்கின்றனர்.இதைக்கண்டு கொள்வார்களா.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments